Monday, May 5, 2014

அட்லாண்டாவில் ஆக்ரோஷம். !!!!!!!!!



முத்துகாமிக்சின் புதிய வெளியீடு கடந்த வாரம் ஏழு காடு, ஏழு மலை, ஏழு கடல் தாண்டி வந்து சேர்ந்தது. உடனே பிரித்து இந்திய தபால்தலைகளை கவனமாக வெட்டி பாதுகாத்துவிட்டு படிக்கத்திறந்தால், அட்டகாச வண்ணத்தில் உயர்ரக பேப்பரில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தக்கதை கொடுத்த குதூகலம் எதற்கும் இணையில்லை.
கேப்டன் டைகர் எனக்கு பலமுறை அறிமுகமான ஹீரோதான், என்றாலும் இதில் சிறிது வித்தியாசமான கதைக்களத்தில் ஜொலித்தார். கதாசிரியர் - பிரான்சே கார்டெகியானி.வர்ணம் - ஜேனட் கேல் ,சித்திரம் - காலின் வில்சன்.
ஊரில் இருக்கும்போது படித்ததற்கும் இப்போது படிப்பதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இப்போது இந்த இடங்களையெல்லாம் பார்த்ததும், இந்த வரலாற்றுப் பின்னனியை அறிந்ததும் கூடுதல் சுவாரஸ்யத்தைக் கொடுத்தன.
அமெரிக்கா முற்றிலும் ஒருங்கிணைக்கப்படாத சமயத்தில் 1864-ல் அமெரிக்காவில் வட மற்றும் தென் பிராந்தியத்திற்கு நடுவே நடந்த 'சிவில் வார்' பின்னனியில் நடந்த சண்டையினூடே நடந்த நிகழ்வாக இந்தக் கதை வருகிறது.
முத்துகாமிக்ஸ் கடந்த 40 வருடங்களில் எப்படியெல்லாம் மாறி இப்போது உலகத்தரமான வடிவம், வர்ணம் மற்றும் அச்சில் வருவது பாராட்டத்தகுந்தது.
இப்போது புதிதாக காமிக்சின் மூலத்தின் கதாசிரியர் மற்றும் ஓவியரையும் அட்டையிலேயே பிரசுரிப்பது, விஜயன் அவர்களை எப்படி நினைவு கூர்ந்து அங்கீகாரம் கொடுக்கிறார் என்பதைக வெளிப்படுத்துகிறது. விஜயன், யு ஆர் சிம்ப்ளி கிரேட். அதோடு அட்டைப் படத்தை வடிவமைத்த உள்ளூர் ஓவியரையும்  குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும் தமிழாக்கம் செய்தவரையும் குறிப்பிடலாம்.
Vijayan
விஜயன் உங்களின் தொடர்ந்த ஆர்வத்திற்கும், குறைந்த செலவில் தரமான காமிக்ஸ்களை தொடர்ந்து தருவதற்கும் நன்றி செலுத்தி தலை வணங்குகிறேன்.
அப்படியே நம்ம பழைய ஹீரோக்களையும் இதே மேகஸின் வடிவத்தில், வண்ணத்தில் மறுபதிப்பு செய்தால் உங்களுக்கு புண்ணியம் உண்டாகும். உங்கள் புள்ளை குட்டிகள்  நன்றாக இருப்பார்கள்.

முக்கிய அறிவிப்பு :

தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக வருகின்ற மே 10 ஆம் தேதி , நடக்கும் அன்னையர் தின கொண்டாட்டத்தில் திருமதி உமையாள் முத்து அவர்கள் தலைமையில் நடக்கும் பட்டிமன்றத்தில் அணித்தலைவராக அடியேன் பேசுகிறேன் . உங்கள் வருகையையும் வாழ்த்தையும் எதிர்பார்க்கிறேன்.

6 comments:

  1. ///அடியேன் பேசுகிறேன் .///
    உங்க வீட்டுகாரம்மா உங்க பேச்சை கேட்பார்களா? நான் கேட்பது வீட்டில்? ஹீ.ஹீ.ஹீ

    எதிர்கட்சி தலைவராக உங்கள் மனைவி இருந்தால் இன்னும் காரசாரமாக இருக்குமோ

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் கேட்காததனால்தான் மேடையில் பேசவேண்டிருக்கு
      வீட்டில் எதிர்க்கட்சியாக இருப்பது போதாதா , மேடையிலும் வரவேண்டுமா ?

      Delete
  2. Font மாறியிருக்கே! பழைய தினத்தந்தி பேப்பர் மாதிரியே இருக்கு.

    நீங்கள் பேசுவது தாய் பக்கமா? தந்தை பக்கமா?

    ReplyDelete
    Replies
    1. தந்தை பக்கம்தான் , என் வீட்டுக்காரம்மா கிட்டே சொல்லிராதீங்க ப்ளீஸ் ..

      Delete
  3. முத்து காமிக்ஸ் - மீண்டும் படிக்கக் கிடைக்கிறது என நினைக்கும்போது மகிழ்ச்சி....

    பட்டிமன்றத்தில் சிறப்பாக பேச வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete