இல்லம்மா, அதெல்லாம் ஒண்ணுமில்ல. நாங்க எல்லாம்
நல்லாத்தான் இருக்கோம். எது குளிரா? அது இருக்கத்தான செய்யும். சரி நீங்க ஒடம்பை பாத்துக்கங்க.
என்ன இந்தியாவுக்கு திரும்பிரவா?. இல்லம்மா அது முடியாது, இட்ஸ் டூ லேட். சரிம்மா எனக்கு
இன்னொரு போன் வருது. நான் அடுத்த வாரம் உங்கள்ட்ட பேசுறேன்.
ஹலோ, விசுவா, ஆமாமா ஆபிசுக்கு வந்துட்டேன்.
என்ன பண்றது. வேலைக்கு வந்துதானே ஆகனும். சரி விசு கலிபோர்னியா எப்படி இருக்கு? என்ன
70 டிகிரியா. இங்க மைனஸ் 20. நியூயார்க் வர்றதுக்கு பதிலா பேசாம அங்க வந்திருக்கலாம்.
விசு ஒரு இந்தியா கால் வருது, அப்புறம் பேசுறேன்.
ஹலோ
ஹலோ லோ லோ
“யார் பேசுறது”?
“சேகரு இருக்காரா”?
“எலேய் மகேந்திரா? என்னடா இது அதிசயமா”?
“இல்லடா அமெரிக்காவுல பனிப்புயல்னு சொல்லி பயமுறுத்தினாய்ங்க
வியாழக்கிழமை பதிவும் வரலையா ,அதான் கூப்பிட்டுப்பார்க்கலாம்னு”.
“பரவால்லையே பாசக்கார பயடா நீ”
“இல்ல உயிரோட இருக்கயா, இல்ல பனில வெறச்சு செத்துட்டயான்னு
கேட்கலாம்னு”.
“அடப்பாவி பாசக்காரன்னு, நெனைச்சா நீ ரொம்ப
மோசக்காரனா இருக்கியேடா”.
“அது சரி குடிக்க தண்ணிக்கு என்ன செய்ற”?
“அது எப்பவும்போல் டயட் வாட்டர்தான்”.
“அது இல்லடா தண்ணியெல்லாம் ஒறைஞ்சு போச்சுன்னு
சொன்னாய்ங்க”.
“ஹஹஹ அதெல்லாம் இல்லடா, வீட்டுல 24 மணி நேரமும்
தண்ணீரும் வெண்ணீரும் தாராளமாய் வரும்”.
“சரி என்னதான் நடக்குது அங்கே”?
புதுவருஷம் பொறந்த அடுத்த நாள் வியாழக்கிழமை
ஒரு பனிப்புயல். ராத்திரி ஆரம்பிச்சு விடிய விடிய கொட்டோ கொட்டுனு ஒரு அடிக்கு மேல
கொட்டிட்டுப்போயிடுச்சு. வெள்ளிக்கிழமை
ஆபிஸ்க்கும் போகல. அத நாக்குத்தள்ள கிளீன் பண்ணா, ஞாயிற்றுக்கிழமை ஒரு உருக்குற மழை
(Freezing Rain) அப்புறம் அது சாதாரண மழையாகி, கொஞ்சம் உறைபனியை கரைச்சுவிட்டுறுச்சு.
சந்தோசமா இருந்தா, திங்கள்கிழமை, மைனஸில் போவுதுன்னு
சொன்னாய்ங்க. விடியக்கால செல்போன் கோழி கூப்புட எழுந்தா, என் மனைவி ரொம்பக்குளிருது
கொஞ்சம் பஸ் ஸ்டாப்புல விடுன்னு சொன்னா. வெளியே வந்தா, ஒரு குளிர்காத்து அடிச்சுது
பாரு, என் ஸ்டார்ம்டோர் வேகமாக ஒரு அடி அடிச்சுது. இதுக்குப் பேர்தான் நெத்தியடி போல.
வலதுபுற நெத்தியில நெல்லிக்காய் முளைச்சுருச்சு. மனைவிய விடலேன்ன எலுமிச்சம்பழம்
முளைக்கும்
அதனால இது தேவலைன்னு
அப்புறம் விட்டுட்டு வந்து, நான் ஆபிசு வந்து
சேர்றதுக்குள்ள கட்டை வெறச்சுப்போச்சு. பேசாம இந்தியா போயிரலாம்னு ஆயிப்போச்சுரா. வயித்துப்பொழப்புக்கு
எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு.
இதுக்கிடையில நம்ம தோஸ்த் ஜூட் (Jude)பாஸ்டனிலிருந்து
போன் பண்ணான். ஒரு அடிக்கு மேல் ஸ்நோ வந்துருச்சுன்னு சொன்னேன். அடப்போடா இவனே, இங்க
பாஸ்டனில் 5 அடிக்கு ஸ்நோ என்றான். ஆறடி ஜூடே அசந்துட்டானே, நம்ம கொஞ்சம் பரவாயில்லைனு
நினைச்சேன்.
நியூயார்க் சென்ட்ரல் பார்க் ரெக்கார்ட் படி
ஜனவரி 7, 2014 குளிர்காற்றினால் மைனஸ் 20 டிகிரி காண்பிக்க, இதுபோல் கடைசிமுறை
1896-ல் தான் வந்ததாம். இது ஒரு புதிய ரெக்கார்டாம். இந்த ரெக்கார்டு பிரேக்ல, எங்க
தல பிரேக் ஆனதுதான் மிச்சம்.
என்னாங்கடா ஏன்னு கேட்டா, "போலார் வெர்டெக்ஸ்
"னு சொல்றாய்ங்க. (Polar Vertex). நம்ம ரமணி பாஷையில சொல்லனும்னா “வட துருவத்தில் மையம் கொண்டிருந்த குறைந்த அழுத்த
தாழ்வு மண்டலம் இரண்டாக பிளந்ததில், அப்படியே அது பனிப்புயலாக மாறி, பரவி வட அமெரிக்காவை
100 கிமீ வேகத்தில் தாக்கியது” . அதனால் நடந்த பெரும் பிரச்சனை இது.
இதுல "ஆர்க்டிக் ஏர் மாஸ்"
(Arctic Air Mass) ஒண்ணு அடுத்து வருதாம். ஐயையோ தாங்காதம்மா. இந்தியாவுக்கு டிக்கட்டைப்போடு.
வெளியே போகக்கூடாதுன்னு, மூச்சைப்பிடிச்சு உட்கார்ந்திருந்தேன்.
ஆனா பேங்க்ல ஒரு கையெழுத்துப் போடனும்னு சொன்னதால், உயிரைக்கையில் பிடிச்சுட்டு வெளியே
போனா, அங்க இந்த வெள்ளைக்கார நாதாரிங்க ஐஸ்கிரீம் சப்பிக்கிட்டு, வெளியே திரியறாய்ங்க,
அடங்கொக்க மக்கா ...
ஹலோ ஹலோ, அப்பவே வச்சுட்டான் போலருக்கு.
ஊருக்கு வாங்க... சந்திப்போம்...
ReplyDeleteகண்டிப்பாக அடுத்த முறை .
Deleteநன்றி திண்டுக்கல் தனபாலன்,
பனிப்பொழிவு..... கொஞ்சமா இருந்தா எஞ்சாய் பண்ணலாம்! இவ்வளவு இருந்தா :(((
ReplyDeleteவந்து பாருங்க ,நன்றி வெங்கட் நாகராஜ்.
Delete