Monday, December 2, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 5: பச்சை பச்சையாக!!!!!!!!!!!!

ஜாலியாக ஒன்வேயில் நுழைந்து விட்டேனாம். எங்களுக்கு எஸ்கார்ட் கொடுத்து, டிராபிக்கை நிறுத்தி, திருப்பிவிட்டார்கள் அந்தப் போலிஸ்காரர்கள். ஒரே ஆச்சரியமாய்ப் போய்விட்டது. இதுவே நியூயார்க் என்றால், நிற்க வைத்து கேள்வி கேட்டு, $115 டாலருக்கு டிக்கட் கொடுப்பதோடு, 2 பாயின்ட்களும் கொடுத்திருப்பான். 8 பாயின்ட் சேர்ந்துவிட்டால், ஒரு வருடத்திற்கு லைசென்சை சஸ்பெண்ட் பண்ணிவிடுவான். நியூயார்க்கின் முக்கிய வருமானம் இந்த ஃபைன் தான் என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது.
        புன்சிரிப்புடன் தலையாட்டி, " என்ஜாய் யுவர் ஸ்டே" என்றார் ஒரு காப். இத மட்டும் ஆங்கிலத்தில் கற்று வைத்திருக்கிறார்கள். மத்தபடி இங்கிலிஷ் ம்ஹீம் சுத்தம்.
        "மும்பை”க்கு வந்து சேர்ந்தோம். இருட்டில் உள்ளே பெரிய பார் போல இருந்தது, பலவித சைஸில் நிறங்களில் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "அனிஷா இது உணவகமா இல்லை வெறும் பாரா", என்று கேட்டுவிட்டு, உள்ளே போனேன். உள்ளே ஒருபுறம் ஒளி நிறைந்த கண்ணாடி அறையில் தொப்பி அணிந்த ஆட்கள் ரொட்டியைத் தட்டிக் கொண்டிருக்க, வெளியே இருட்டு டைனிங் ஹாலில் தாவணி போன்று ஒன்றை அணிந்திருந்த இரு அப்சரஸ் வெள்ளைக்காரிகள், “பியன் வெனிஸ்டா” என்றார்கள். ஆ இது ரெஸ்டாரண்ட் கம் பார் என்று நினைத்து, குடும்பத்தை உள்ளே கூப்பிட்டேன். இருட்டில் தட்டித்தடவி உள்ளே வந்து உட்கார்ந்தோம். இருட்டில் கண்கள் பழக ஒரு பிரமாண்ட மாடர்ன் பிள்ளையார் பாருக்குப் பக்கத்து சுவற்றில் தொங்கினார்.
        ஒரு குட்டை அப்சரஸ் வந்து, எங்கள் டேபிளில் சிறுசிறு சுட்டிகளில் இருந்த மெழுகுவர்த்திகளைப் பொறுத்தினாள். அப்பாடா கொஞ்சம் வெளிச்சம் வந்தது. பளிச்சென்ற வெளிச்சம் நிறைந்த கண்ணாடி அறையில் ரொட்டி தட்டிக் கொண்டிருந்த சமையல் அறை மிகச்சுத்தமாக இருந்தது. அந்த கண்ணாடி அறை ஐடியா சூப்பர். ஆனால் நம்மூர் சமையலறையை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்ட முடியுமா? காட்டினால் ஒருவராவது சாப்பிட வருவார்களா?. ஆனால் உள்ளே இருந்த ஆட்களைப் பார்த்தால் நம்மவர் மாதிரி தெரியவில்லை. அவர்கள் வெள்ளை உடையும் தொப்பியும் பார்த்தால் ஏதோ வெள்ளைக்கார நேவி ஆஃபிசர்கள் மாதிரி தெரிந்தது. வெளியேயும் வெள்ளையர் தவிர வேறு யாரும் இந்தியர் இல்லை. நான் சைகை செய்ய மிதந்து வந்த அப்சரஸிடம் கேட்டேன். "இது இந்திய உணவகம்தானே". அவள் சொன்னாள், இது இன்டியன் இன்ஃபுளுயன்சுடு  (Indian Influenced) என்று. சரிவிடு சாப்பிட்டுத்தான் பார்ப்போம் என்று மெனு கார்டை புரட்டினேன். என்ன முயன்றும் படிக்கவில்லை. வர்த்திச்சுட்டியை எடுத்து சாய்த்து படிக்க முயல, உருகிய மெழுகு கையைப்பதம் பார்த்தது. என்னடாது, நம்மூர் சாப்பாடு சாப்பிட இவ்வளவு கஷ்டமா? குட்டைப்பெண் பாவாடை சரசரக்க வந்து ஒரு சிறிய ஃப்ளாஸ் லைட் (டார்ச் லைட்) கொண்டு வந்தாள். ஒரு வழியாக அப்படைசர், காலிஃபிளவர் பக்கோடாவும், பிண்டி (வெண்டைக்காய்) வறுவலும் ஆர்டர் செய்தோம். விலை படுபயங்கரமாக இருந்தது. கடலை மாவில் முக்கிப் பொரித்து கொண்டுவந்தனர். காலிஃபிளவர் வேகவில்லை, வெண்டைக்காய் முற்றல். நுனியை ஒடித்து வாங்கத் தெரியவில்லை போலிருக்கிறது.
        அடுத்து மெயின் கோர்சும்  பச்சையாக இருந்தது. நாலு சிறிய பாதிவெந்த சிக்கன் பீஸ்களை எடுத்து வந்து "சிக்கன் தந்தூரி” என்று $20 டாலர் சார்ஜ் வேறு. பச்சையாக இருந்ததை சாப்பிடமுடியாமல் வாயில் பச்சை பச்சையாக வந்தாலும், கட்டுப்படுத்திக் கொண்டு, "மும்பை" வந்து வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டாம் என நினைத்து, வெளியே வந்துவிட்டோம். என் மனைவி கேட்டால் 20 டாலருக்கு குறைந்தது 15 பவுண்ட் சிக்கன் கிடைக்கும் என்று.      வீடுவந்து பழங்களை சாப்பிட்டுவிட்டு, படுக்கை எறினோம்.
ஆகஸ்ட் 6, 2013 செவ்வாய்க்கிழமை
எச்சரிக்கை: இன்று பழைய (Old San Juan) சேன் ஹுவான் செல்லவிருப்பதால், அதன் பின்னனியை வரலாற்று ஆராய்ச்சியோடு அணுகப்போவதால், வழக்கம்போல் வரலாற்று அலர்ஜி உள்ளவர்கள், சற்றே விலகிச் செல்லவும்.
        போர்ட்டோரிக்கோவின் பூர்வ குடிகள் காட்டுமிராண்டிகளாக நிர்வாணிகளாக வாழ்ந்து வந்த சமயத்தில் படகுகள் மூலம் இடம்பெயர்ந்த செவ்விந்தியர் (TAINO INDIANS) திரளாக வந்து, அங்கிருந்த மக்களுக்கு உடுத்தவும், உறைவிடம் அமைக்க மற்றும் உணவு பயிரிடவும் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கும் போதுதான் கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தத் தீவைக்கண்டுபிடித்தார்.
        இயற்கை வளங்கள் கொட்டிக்கிடந்ததால், ஸ்பானியர் மெதுவாக வந்து ஆக்கிரமிக்க இது ஸ்பானிய காலனி ஆதிக்க தீவாக மாறியது. அவர்கள் இட்ட பெயர்தான் போர்ட்டோரிக்கோ. "வளமான துறைமுக நகர்" என்பது அதன் அர்த்தம்.
        இதன் தலைநகரம்தான் சேன் வான் (San Juan). செயின்ட் ஜான் தி பேப்டிஸ்ட் (St. John the Baptist) அவர்களின் பெயர்தான் இது. டொமினிக்கன் ரிபப்ளிக்கில் உள்ள சான்ட்டா டோமிங்கோ (Santa Domingo) என்ற நகரத்திற்கு அடுத்தபடியாக, ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட இரண்டாவது பழமையான நகரம்தான் சேன் வான்.
        சுமார் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரம் பல விளையாட்டுப் போட்டிகளை நடத்திய பெருமை பெற்றது. அவற்றுள் சிலவற்றை கீழே தருகிறேன்.
1.  1966 - சென்ட்ரல் அமெரிக்கன் & கரீபியன் கேம்ஸ்.
2.  1979 - பான் அமெரிக்கன் கேம்ஸ்.
3.  2006, 2009 & 2013 - வேர்ல்ட் பேஸ்பால் கிளாசிக்ஸ், கரீபியன் சீரிஸ் & ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்.
4.  2010 - MLB சான் வான் சீரிஸ்.
Ponce de Leon
Juan Ponce de Leon
        போர்ட்டரிக்கோ தீவுக்கு முதன்முதலாக கி.பி.1508-ல் வான் பான்சே டி லியன் (Juan Ponce de Leon) தலைமையில் கப்பாரா (Caparra) என்ற இடத்திற்கு ஸ்பானியர் வந்து சேர்ந்தனர். ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர்கள் இடம் பெயர்ந்து வந்து சான் வானுக்கு வந்தனர். அந்த இடத்தை போர்ட்டரிக்கோ என்று முதலில் அழைத்தனர். கி.பி.1521-ல் தான் சேன் வான் என்று பெயரிடப்பட்டு, பின்னர் போர்ட்டோரிக்கோ என்ற பெயர் அந்த முழுப் பகுதிக்கும் சூட்டப்பட்டது.

வாருங்கள் சேன்  வானின் கோட்டைக்குள் போவோம் .


பயணம் தொடரும் !!!!!!!!!!!!!

14 comments:

  1. ///இதுவே நியூயார்க் என்றால், நிற்க வைத்து கேள்வி கேட்டு, $115 டாலருக்கு டிக்கட் கொடுப்பதோடு, 2 பாயின்ட்களும் கொடுத்திருப்பான்.///

    நீயூயார்க்கல பைன் ரொம்ப சீப்பால இருக்கு. நான் ஒவ்வொரு தடவையும் நீயுஜெர்ஸில நான் கட்டும் போது 400 க்கு மேல காட்டுறேன்

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ ஏதிட்டான்களா ?சொல்லவேயில்லை ?

      Delete
  2. சரக்கு பக்கதில் பிள்ளையார் படமா ? கண்டனம் தெரிவிக்காமல் வந்துட்டீங்களா?

    ReplyDelete
    Replies
    1. முதல் படையலே அவருக்குத்தானாம் !!!!!!!!!

      Delete
  3. நீங்கள் 20 டாலர் கொடுத்தது சிக்கனுக்கு அல்ல சிக்குன்னு வந்த அப்சரஸுக்கு அத மறக்காதீங்க நண்பரே

    ReplyDelete
    Replies
    1. அடச்சே ,இது தெரியாம சரியாவே பார்க்கலேயே !!!!!!

      Delete
  4. ///ற்றே விலகிச் செல்லவும். //
    நான் விலகி செல்கிற ஆள் இல்லை அதனால ஒரே ஜம்பாக தாவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க தாவுற ஜாதின்னு தெரியாம போச்சே ?

      Delete
  5. இப்படியும் மும்பையில் ஹோட்டல் உள்ளதா...?

    போர்ட்டரிக்கோ தகவல் அறியாதவை... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மும்பையில் அல்ல...
      போர்ட்டரிக்கோவில் மும்பை என்ற பெயரில் ஒரு ஹோட்டல் உள்ளது. அங்குதான் நம்ம தலைவர் சிக்கென இருக்கும் பெண்களை இல்லை இல்லை சிக்கனை சாப்பிட சென்றுள்ளார்

      Delete
    2. அவர்கள் உண்மைகளா?
      அவர்கள் பொய்களா?

      Delete
  6. மும்பை பெயர் மட்டும் தான் இந்தியப் பெயரா...

    தொடர்கிறேன்..

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. நன்றி...வெங்கட் நாகராஜ்

      Delete
  7. எங்கள் மாப்பிள்ளை மிகக் கவனமாய்
    கார் ஓட்டுவதை கண்டு அவர் மட்டும்தான்
    அப்படி என நினைத்துக் கொண்டிருந்தேன்

    ஃப்ஃன் விவரம் தெரிந்ததும்தான் ரொம்ப
    ரொம்ப சுதாரிப்புக்கான காரணம் தெரிந்தது

    (நாங்கள் இருப்பதும் நியூ ஜெர்ஸி )

    ReplyDelete