Thursday, September 26, 2013

யுஎஸ் ஓபன் டென்னிஸ் - 2013


       இரண்டு வாரத்திற்கு முன்னால் 34-ஆவது தெரு “மேசிஸ் ஸ்டோர்” முன்னால் ஒரு ஸ்மார்ட் ஆள்  கடந்து போனபோது, யார் இது, தெரிந்த முகமாக இருக்கிறதே?, என்று யோசித்தபோது சட்டென்று ஞாபகம் வந்தது. ஆஹா இது “லியாண்டர் பெயஸ்” அல்லவா? என்று. ஷாப்பிங் முடித்து வெளியே வந்து கொண்டிருந்தான். சில வருடங்கள் முன்னால் இதே இடத்தில், காதல் மனைவியுடனும் மகளுடனும் பார்த்தேன் .

இப்போது தனியாக. ஏனென்று தெரியவில்லை.  திரும்பவும் விரைந்து, "லியாண்டர், வெல்கம் டு நியூயார்க்" என்று சொன்னேன். (அட மடையா அவன்தான் அடிக்கடி வருபவனாச்சே, வெல்கம் பேக் டு நியூயார்க் என்றுதானே சொல்லியிருக்கனும்). புன்னகையுடன் கைகொடுத்து விட்டுச்சென்றான்.
       நான் ஒரு மட்டி, யு.எஸ் ஓபனுக்குத்தான் அவன் வந்திருக்க வேண்டும் என்பதை நினைக்காமல், வாழ்த்துச்சொல்லக்கூட மறந்து போனேன்.
       அலுவலகம் திரும்பி, யு.எஸ் ஓபன் ஷெட்யூல் பார்த்தபோது, ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டரின் பெயரும் இருந்தது.
       மனைவியிடம் சொன்னபோது, "ஆமா நம்மாட்கள் ஜெயிக்கவா போறாங்க, சும்மாருங்க. முந்திகூட இப்படித்தான் சானியா மிர்ஸா  மேல நம்பிக்கை வச்சு என்னாச்சு ?" என்றாள்.


       2007 என்று நினைக்கிறேன். சானியா மிர்ஸா விளையாடிய மூன்றாம் கேம். போயிருந்தேன். ஏற்கனவே முதலிரண்டில் வென்றிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. US ஓபன் நேரில் பார்ப்பது அப்போதுதான் முதன்முறை எனக்கு. சானியா மிர்ஸா உலகின் 32ஆவது ஆட்டக்காரியாக இருந்து, முன்னேறிக் கொண்டிருந்தாள்.
       ஆட்டத்தைப்பார்க்க பல இந்தியர்கள் யு.எஸ்ஸின் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்தனர். மேலும் லண்டன், ஐரோப்பா மற்றும் இந்தியாவில் இருந்தும் வந்திருந்தனர். அதுமட்டுமல்ல, அமெரிக்க யூத் சிலர் வந்து ஆர்ப்பரித்து சப்போர்ட் செய்தனர். சில கொல்டிப்  பசங்கதான், “ஹைதராபாத் பிரியாணி ஜிந்தாபாத்”, என்று கத்திக்கொண்டு இருந்தது எரிச்சலை மூட்டியது. இறுதியில் சானியா ஜெயித்தது ஒரு கிரேட் ஃபீலிங். ஆனால் அதன்பின் சானியா வெகுவாக முன்னேறிப் போகமுடியல. நம்மாளுகளும் அவளை விளையாட விட்டாய்ங்களா , குட்டைப்பாவாடை அது இதுன்னு சொல்லி, கடசியில பாகிஸ்தான் ஆளை கல்யாணம் செய்து எல்லாம் முடிஞ்சு போச்சு. இப்ப US  ஓபன்ல கூட பெண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடுகிறார்கள். பெரிதாக சோபிக்கவில்லை.
       நம்பாள் லியாண்டர் தன் ஜோடி ரேடக்குடன், பல கேம்கள் முன்னேறி இறுதியாட்டம் வரை வந்துவிட்டான். "மாப்ள நீ இவ்வளவு வந்ததே சந்தோசம்டா" என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் ஒரு நப்பாசை, ஃபைனலில் ஜெயித்தால் நல்லா இருக்குமே.
       மகேஸ் பூபதியை விட லியாண்டரை எனக்குப் பிடிக்கும். ஏன்னா லியாண்டர் சென்னையில் பயிற்சி பெற்றவன். எம். சி.சி.ஸ்கூல்ல   பெஞ்சி கூட படிச்சவன். இருவரும் நிறைய கிராண்ட் ஸ்லாம் ஜெயித்திருக்கிறார்கள். அதுக்குள்ள யார் கண் பட்டதோ, ஈகோ வந்து விளையாடி, சண்டைபோட்டு பிரிஞ்சிட்டாய்ங்க.
       ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தைவிட, டபுள்ஸ் அவ்வளவு கஷ்டமில்லை. இருந்தாலும் அதுலயும் ஜெயிக்கணுமே. டென்னிஸ் விளையாடி ஜெயிக்க நல்ல ஸ்டெமினா வேணும்.
       ஃபைனல்ஸ் நாளும் வந்தது. அரங்கம் நிறையவில்லை. நம்மாள் லியாண்டர் ரொம்ப உயரமில்லை. ஆனால் லேசான தொப்பை இருந்தது. 40 வயதுக்கு தோஷமில்லை ஆனால் ஜெயிக்கனுமே. பார்ட்னர் ரேடக் ஸ்டெபநெக் (Radek Stepanek) நன்றாக விளையாடினான். எதிர் டீம் “அலெக்சாண்டர் பேயா” மற்றும் “புருனோ சோரஸ்” சூப்பர் டீம். ஆனா பேயா (Peya) பேயாவும் விளையாடல, தீயாவும் வெளையாடல. சமீபத்தில்தான் வின்ஸ்டன் சேலம் ஓபனை ஜெயித்த கையோடு வந்திருந்த லியாண்டர் டீம் சுறுசுறுப்பாகவே இருந்தது. பந்தை அடிக்கடி தவறவிட்ட லியாண்டர் பக்கமே அதிகம் அடித்தார்கள். ஆனாலும் சமாளித்து விளையாடிய லியாண்டர் பாயிண்ட்களையும் எடுக்க ஆரம்பித்தான். இறுதியில் 6-1, 6-3 நேர்செட்களில் ஜெயித்தது லியாண்டர் டீம். போன வருடம் ஆஸ்திரேலியன் ஓபனிலும் இதே ஜோடிதான் ஜெயித்தது.

       கப் வாங்கும்போது, பின்னால் நமது தேசியக்கொடியைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பட்டொளி வீசிப்பறந்த மூவர்ணக் கொடியைப் பார்த்தபோது மெய் சிலிர்த்தது. லியாண்டருக்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இது எட்டாவது டைட்டில். மொத்த போட்டிகளில் 14ஆவது. US ஓபனில் மூன்றாவது.

       அதுமட்டுமல்ல 40-வயதில் இந்த கேட்டகிரியில்  கிராண்ட் ஸ்லாம் போட்டியினை யாருமே ஜெயித்ததில்லை. ஹேட்ஸ் ஆஃப் டு  யு, லியாண்டர், யு ஹேவ்  மெய்ட்  ஆல்  இண்டியன்ஸ் ப்ரௌட்.

8 comments:

  1. Replies
    1. பின்ன இருக்காதா? தனபாலன்.

      Delete
  2. "சில வருடங்கள் முன்னால் இதே இடத்தில், காதல் மனைவியுடனும் மகளுடனும் பார்த்தேன்" .அண்ணே, உங்களுக்கு லவ் மேரேஜா? சொல்லவே இல்ல...

    ReplyDelete
    Replies
    1. உங்களைப்போலவே, எனக்கும் காதல் வந்தது, கல்யாணம் ஆனபின்தான் .
      ஐயா ரொம்ப யோசிக்காதீங்க, மனைவி மேல்தான்.

      Delete
  3. ஆமாம் நீங்க காதல் மனைவி,மகள் என்று சொன்னது பயஸ்ஸை பற்றி தானே??

    ReplyDelete
  4. ஆமாம்,ஆமாம்,ஆமாம் அமுதா .

    ReplyDelete
  5. We are proud of him too...

    Just an FYI..

    Martina has the distinction of being the oldest grand slam title winner at the age of 49
    Leander has a career grand slam at 40...and the oldest in that category...
    Grand slam = winning all four majors in the same calendar year...

    He is an inspiration no matter what....

    ReplyDelete
    Replies
    1. Thank you ரெ வெரி. I have made that correction.

      Delete