Thursday, July 10, 2014

முக்கோணக்காதல் !!!!!!!!!!!!!!!!

நண்பர் பிரபாகர் மதுரையிலிருந்து வந்ததை முன்னிட்டு திட்டமிட்ட பல நிகழ்வுகளில் “பிராட்வே ஷோ” போவதும் ஒன்று. ஒரு மாலை வேளையில் டைம் ஸ்கொயரில் அலைந்து திரிந்து பல தியேட்டர்கள் சுற்றி அவரும் அவர் மனைவியும் 'ஃபேன்டம் ஆஃப் தி ஆபரா'  போகலாம் என்று முடிவு செய்தார்கள்.
ஆன்லைனில் வாங்கலாம் என்று பார்த்தால் குறைந்தபச்ச டிக்கட் $130-க்கு குறைவாக இல்லை. அதிகபச்சத்தை கேட்காதீர்கள், தலை சுற்றிவிடும். தியேட்டருக்கே நேரில் சென்று விசாரித்தால் சிறிது குறைவாகக் கிடைக்கலாம் என்று ஒரு நண்பன் சொன்னதை பிரபாகரிடம் சொல்ல, அவரும் அங்கேயே போய் ஒரு டிக்கட் $50வீதம் மூன்று டிக்கெட்டுகள் வாங்கிவிட்டு ஃபோன் செய்தார்.

அன்று வியாழக்கிழமை (மே 29, 2014) இரவு எட்டு மணிக்கு ஷோ. டைம் ஸ்கொயரில் இறங்கி, வழக்கம்போல் அலை மோதும் பல நாட்டு டூரிஸ்ட்களை  கடந்து மெஜஸ்டிக் தியேட்டருக்கு சுமார் 7.30 அளவில் சென்றோம். அங்கும் திருவிழாக் கூட்டம்.  வெளியில் இரண்டு பெரிய லைன் இருந்தது. நாம் தான் டிக்கட் வாங்கிவிட்டோமே, என்று லைனைக்கடந்து நேரே போனால், லைனில்தான் வரவேண்டும் என திருப்பி அனுப்பினார்கள் . டிக்கட் வாங்கியவர்கள் உள்ளே நுழையும் லைனாம் அது. செக்யூரிட்டி செக் என்றார்கள். போச்சுரா எல்லாத்தையும் கழற்றிவிட்டு விடுவார்களே என்று யோசிக்கும் பொழுது, கையில் வைத்திருந்த பைகளை மட்டும் சோதனை செய்துவிட்டு உள்ளே அனுப்பினார்கள்.
தியேட்டரின் உள் முகப்பில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் எல்லோரும் வெகு அமைதியாக இருந்தார்கள். அங்கிருந்த கடையிலிருந்த ஒரு முதிர்ந்த பெண்மணி லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் யுவர் அட்டென்ஷன் பிளீஸ்", என்றாள். தியேட்டர்தான் பழசென்றால், கடையிலும் வயதான ஆளைத்தான் போடனுமா, விற்கும் பண்டங்களாவது பழசாக இல்லாமல் இருந்தால் சரி என்று நினைத்துக் கொண்டே கூர்ந்து கவனித்தேன். "உங்களைப்போல் ஒரு அமைதியான கூட்டத்தை நான் பார்த்ததேயில்லை", என்று ஆரம்பித்தாள். "ஒருவேளை எப்பொழுதும் பேசுகிற வழக்கமான டயலாக்காக இருக்கலாம்" என்று பிரபாவிடம் சொன்னேன். "தியேட்டரில் குடிக்கவும் தின்னவும் அனுமதி இருக்கிறது, ஆனால் என்னிடத்தில் வாங்கினால் மட்டுமே", என்றாள். எட்டிப்பார்த்ததில் பலவித மதுவகைகளும் மற்றும் சாக்லெட் வகைககளும் குக்கிகளும் (Cookies) இருந்தன.

அதற்குள் தியேட்டர் உள்ளே போக அறிவிப்பு வர, சாரி சாரியாக கிளம்பினோம். இருபுறமும் இருந்த படிக்கட்டுகளில் ஏறி முதல் பால்கனி கடந்து  இரண்டாவது பால்கனிப்பகுதி சென்று செங்குத்தான படிகளில் ஏறிச்செல்ல கடைசி வரிசைக்கு மூன்று நான்கு வரிசைகள் முன்னால் எங்களுடைய சீட்கள் இருந்தன. ஆஹா பரவாயில்லையே $50 டாலருக்கு இவ்வளவு உயரத்தில் சீட்டா என்று மகிழும்போதுதான் ஞாபகம் வந்தது, அச்சச்சோ சினிமா தியேட்டரில்தான் இருக்கை உயரத்தில் இருக்க வேண்டும். நாடகத்தியேட்டரில் சீட் இருக்கை பக்கத்தில் அல்லவா இருக்க வேண்டும் என்று.

மேடை கீழே அதள பாதாளத்தில் இருந்தது. ஆனால் முன்னால் உட்காருபவர்கள் மறைக்காத வண்ணம் ஒவ்வொரு வரிசையும் தாழ்ந்து இருந்தது. உட்கார்ந்தபின் பார்த்தால் கழுத்தில் ஒரு டிரேயைச் சுமந்து கொண்டு ஒருவன் வந்தான். அந்த டிரேயில் சாக்லெட் வகைகள், குக்கிகள் மற்றும் பானங்கள் இருந்தன. இதுவரை எந்த தியேட்டரிலும் இப்படி நான் பார்த்ததில்லை. நம்மூர் தியேட்டர்களில் தான் இடைவேளையில் இப்படி வருவார்கள்.
அவன் சாக்லெட், குக்கீஸ், டிரிங்ஸ் என்று கூவியது எனக்கு "கை முருக்கு கடலைமிட்டாய்" என்று கேட்டது.


திரும்பிப்பார்த்தால் முழு அரங்கமும் நிறைந்து வழிந்தது. சரியாக எட்டு மணிக்கு பெல் அடிக்க, மேடையின் கீழே உட்கார்ந்திருந்த இசைக்குழு பிரமாதமாக இசைக்க ஷோ ஆரம்பமானது.
அது ஒரு பீரியட் பிளே (Period Play ).பாரிஸில் இருக்கும் ஆபரா ஹவுசில் பாடும்  பெண்ணிடம் ஒரு மாயாவி (Phantom) காதல் கொள்கிறது. அந்தப்பெண்ணோ வேறு ஒருவரிடம் மனதைப்பறி  கொடுக்கிறாள். இந்த முக்கோண காதல் எப்படி முடிகிறது என்பதே கதை.

இது ஒரு மியுசிக்கல் பிளே என்பதால் நடித்த அனைவரும் பாடியும் அசத்தினர். மியூசிக்கல் ஸ்கோர் அமைத்தவர் மிகப்பிரபலமான ஆண்ரூ லாயிட் வெப்பர், AR ரகுமானுக்கு நெருங்கியவர். பாம்பே ட்ரீம்ஸ் என்ற பிராட்வே  ஷோவை  ஆண்ட்ரூ   தயாரிக்க      ரஹ்மான் இசையமைத்தார். 
Andrew Lloyd Webber
இவரைப்பற்றி சுருக்கமாக சொல்வதென்றால்  இவர் வாங்கிய அவார்ட்களை சொன்னால் மட்டுமே போதும். இதுவரை ஏழு  டோனி  அவார்ட், மூன்று  கிராம்மி  அவார்ட் ,ஒரு ஆஸ்கர் அவார்ட், 14  ஐவர் நோவேல்லோ, ஏழு ஆலிவர்  மற்றும் ஒரு கோல்டன் க்ளோப் ஆகியவை . போதுமா ஆண்ட்ரூ ?
காட்சி அமைப்புகள் தத்ரூபமாக இருந்தன. குறிப்பாக நம்ப முடியாத வகையில் படகில் செல்லும் காட்சி இருந்தது. சீன்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றப்பட்டன. மாறுவது கொஞ்சம் கூடத் தெரியவில்லை. மேடையில் இவ்வளவு டெக்னிக்குகள் பண்ணமுடியுமா என்று பேராச்சரியமாக இருந்தது.

இந்த நாடகத்தின் சிறப்புகளைப்பற்றிச் சொல்லும் முன்னால் இந்த தியேட்டரைப்பற்றி சில குறிப்புகள்.
பேருக்கேத்த வகையில் நிமிர்ந்து மிளிரும் "மெஜஸ்டிக் தியேட்டர்" 1927-ல் கட்டப்பட்டது. பிராட்வேயில் உள்ள பெரிய தியேட்டர்களில் ஒன்று. மொத்தம் 1645 பேர் உட்காரும் வசதி கொண்டது. இனி நாடகத்தைப்பற்றி.
1) ஃபேன்டம் ஆஃப்தி ஆபரா முதன் முதலில் 'Her Majesty's Theater' என்ற அரங்கில் 1986-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அரங்கேறியது. எனவே 27 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நடைபெறுகிறது.
2) நியூயார்க் மெஜஸ்டிக் தியேட்டரில் ஜனவரி 1988ல் ஆரம்பித்து இன்று வரை 25 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
3) எனவே பிராட்வேயில் இதுவரையில் அதிக வருடங்கள் தொடர்ந்து நடைபெறும் நாடகம் என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது.
4) இந்த நாடகம் இதுவரை 151 அரங்கங்களில் 30 நாடுகளில் 13 மொழிகளில் நடைபெற்று வருகிறது.
5) நாடகத்தை இதுவரை பிராட்வேயில் மட்டும் 135 மில்லியன் மக்கள் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
6) இதுவரை 5.8 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியிருக்கிறது. இது நாடக சரித்திரத்தில் மட்டுமல்ல, சினிமா வரலாற்றிலும் அடைய முடியாத இலக்கு. இதுவரை அதிகபட்ச லாபம் ஈட்டிய  டைட்டானிக், ET, மற்றும் ஸ்டார்வார்ஸ் -ஆகியவற்றைக் காட்டிலும் இது அதிகம்.
7) இதுவரை 70-க்கும் மேற்பட்ட அவார்டுகளை வாங்கிக் குவித்திருக்கிறது.
8) இதனுடைய ஆல்பம் 40 மில்லியன் பிரதிகள் விற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.
Norm Lowis
நடிகர்கள் அனைவரும் மிகுந்த திறன் படைத்தவர்கள். குறிப்பாக ஃபேன்டமாக நடித்த Norm Lewis, கிறிஸ்டினாக நடித்த அழகிய கதாநாயகி சியரா போகஸ், ராவுலாக நடித்த ஜெரேமி ஹேய்ஸ் ஆகியோர் நடிப்பிலும் பாட்டிலும் அவர்களின் உன்னதமான திறமை தெரிந்தது.
Sierra Boggess
ஆன்ரூ வெப்பர் அவர்களின் துல்லிய இசைக்கோர்ப்பு காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

Jeremy Hays
டைரக்ட் செய்தவர் ஹெரால்ட் பிரின்ஸ். அவர் பெயர் என்னமோ பிரின்ஸ் என்றிருந்தாலும் அவர் இயக்குவதில் கிங்தான்.
ஃபான்டம் ஆஃப் தி ஆபரா ஒரு பரவச அனுபவம். 


ஒரு நடை நியூ யார்க் வாங்களேன், கூப்பிட்டுப்போகிறேன்.

18 comments:

 1. Replies
  1. எப்பொழுதும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வழிகாட்டும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் .

   Delete
 2. nanum palamurai newyork vanthiruuken aanaal ethu theriyalaiye,nanree ,ammam eppadi tamil type seigireergal.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை வரும்போது அவசியம் எதாவது ஒரு பிராட்வே ஷோ பாருங்கள் .

   தமிழ் டைப் செய்வதற்குத்தான் கூகுல் இருக்கே .

   Delete
 3. ///ஒரு நடை நியூ யார்க் வாங்களேன், கூப்பிட்டுப்போகிறேன்.//

  இப்படிதான் ஒரு ஆளை எதிர்பார்த்து காத்து இருந்தேன் இவ்வளவு நாளா? ஆடு ஒன்னூ மாட்டிகிடுச்சு இப்ப.. ஒரு மூணு டிக்கெட் எடுத்து வையுங்க......

  ReplyDelete
  Replies
  1. ஷுயூர் , I டிக்கெட் $100 நீங்க மூணு பேர் , நான் ஒன்னு ஆக மொத்தம் $400 அனுப்பி வெய்யுங்க .டிக்கெட் வாங்கிட்டு தகவல் சொல்றேன்.
   கன்சல்டிங் பீஸ் மற்றும் வண்டிச்சத்தம் ப்ரீ .

   Delete
 4. வாசிப்பதற்கு மிகவும் ஆர்வமாகவும் வியப்பாகவும் இருந்தது. நம் நண்பர் பிரபாகரன் இப்போது எங்கு இருக்கிறார். அவர் பல கலை மன்னராச்சே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா .பிரபாகர் மதுரைக்கு திரும்பிவிட்டார் .

   Delete
 5. சூப்பர் சார்... இது போன்ற நிகழ்ச்சிகளைக் காண ஆவல்... எப்போது வாய்ப்பு கிடைக்குமோ? படங்கள் நீங்கள் எடுத்ததா?

  ReplyDelete
 6. நன்றி ஸ்கூல் பையன்.படங்கள் கூகிள் உபயம் .

  ReplyDelete
 7. முக்கோணகாதல் என்றதும் ஏதோ குடும்ப கட்டுப்பாடு முறையை பத்திதான் எழுத போறீங்களோன்னு நினைச்சேன்...

  ReplyDelete
  Replies
  1. அக்கோணம் பற்றி தக்காணத்திலேயே விட்டுவிட்டுத்தானே இங்கு வந்தேன் .
   இங்குதான் குடும்பமும் இல்லை கட்டுப்பாடும் இல்லையே தம்பி விசு

   Delete
 8. பதிவு வாசித்ததே உடனிருந்த பார்த்த திருப்தி. இது போதும். நியூயார்க்கெல்லாம் நெட்டிலே பார்த்துக்கறோம்!

  ReplyDelete
  Replies
  1. இப்படி சொன்னால் எப்படி? நியூயார்க் இன்னும் அதிக டூரிஸ்டுகளை எதிர்பார்க்கிறது. நன்றி கிருஷ்ணா ரவி .

   Delete
 9. தகவல்கள் படிக்கும் போது பிரமிப்பு.....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் ஓட்டுக்கும் நன்றி.

   Delete